==========================================
ஞாயிறு, 23 ஜூன், 2024
அகமும், புறமும்....
==========================================
வீசுங்கள் பாச்சவுக்கை....
புதன், 19 ஜூன், 2024
என்றன் பேராசை....
(கொச்சகக் கலிப்பா)
சனி, 15 ஜூன், 2024
ஒளியில் சிரிக்கும் ஒயில்....
================================
=========================
வெள்ளி, 14 ஜூன், 2024
புரட்சிவீரன் சே குவாரா....
புரட்சிவீரன் எர்னஸ்ட் சே குவாராவின் புகழ் என்றென்றும் உலகில் நின்று நிலைத்திருக்கும். புரட்சியாளர்கள் மண்ணில் மறைந்து போனாலும், அவர்தம் வழியைப் பின்பற்றி, தொடர்ந்து நடைபோட, அறத்தை உயிரினும் மேலாய் எண்ணுபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
=============================================

=============================================
புரட்சிப் பூவே......
=============================================
நேர்மையினைப் பூட்டுகின்ற அடிமை வாழ்வை
……….நீதியினை வாட்டுகின்ற நாட்டின் தாழ்வை
பார்த்தகணம் வீறுகொண்டே கண்ணில் காணும்
……….பாதகத்தை வேரறுக்க முன்னே நின்றான்!
சீர்த்திகளை செல்வத்தைத் தேடு வோரில்
……….தீமைகளால் நாதியற்ற வர்கள் தேடும்
தீர்ப்பிற்கே அன்றெழுந்த சேகு வாரா;
……….செந்தீயாய் செலுத்துமென்றன் வணக்கம் ஈதே!
நாமின்று வாய்திறவாச் சிலையா என்று,
……….நசுக்கப்பட் டவர்களுக்கே நீதி கேட்டு,
பூமலர்கள் புகழ்மொழிகள் எதுவும் இன்றி
……….புரட்சியொன்றே வாழ்க்கையென்று மண்ணில் வாழ்ந்தான்!
ஊமையென்றே வாய்களின்றி வாழ்ந்த மக்கள்
……….உயர்ந்திடவே அயர்வின்றி உழைத்த உன்னை
பாமலரால் ஏத்துகின்றேன் ஈகை மன்னன்;
……….பாரெங்கும் மணக்குமுன்றன் புரட்சிப் பூவே!
பிகு:
ஞாயிறு, 26 மே, 2024
திசை மாற்றிய திருப்பங்கள்...
திங்கள், 22 ஏப்ரல், 2024
வாழ்வென வாழ்வமே!.......

வாழ்வென வாழுவீர்!
(நிலைமண்டில அகவற்பா)
============================
அவனி = பூமி, செகம் = உலகம்,
திங்கள், 15 ஏப்ரல், 2024
வாக்களிப்பீர்......
மறக்காமல் வாக்களிப்பீர்......
=============================
காண்பதெலாங் கொள்வதுவுங் கண்போக்கிற் களிப்பதுவும்,
மாண்பென்று மயங்காத மானிடர்க்கே வாக்களிப்பீர்!
தன்னெறியாய்த் தருக்கரவர் தயக்கமற தரணியிலே,
புன்னெறியாம், புரையோடு புறம்போக்குப் புழுதியிலே,
என்றுமுழல் எத்தரிங்கு வீழ்ந்திடவே வாக்களிப்பீர்!
முடிப்பதற்கு முன்னின்று முடங்கரற முயலாமல்,
அடுக்கடுக்கா யழுக்கென்னு மாழியிலே வீழ்ந்துழலும்,
நெடுமரத்துக் கயமைகளும் நெக்குவிட வாக்களிப்பீர்!
தணலேறி தகிக்கின்றச் சழக்கென்றும், சலிப்பில்லா
துணவென்று மரசியலி லுழலுகின்ற உலுத்தர்கள்
கணப்போதிற் கரைந்தோடக் கடுஞ்சினத்தில் வாக்களிப்பீர்!
மங்குலென நிலையின்றி வஞ்சகரும் மயக்கத்தில்
முங்குவதால், நல்லவர்கள் முன்னெடுக்கும் நல்லறமே
இங்குநிதம் பொலிந்திடத்தா னெழுச்சியுடன் வாக்களிப்பீர்!
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
கொள்ளுகின்ற கொடுமைகளைக் கொளுத்திடவே வாக்களிப்பீர்!
மூக்கிழந்த சூர்ப்பனைபோல், முடந்தையென எந்நாளும்
ஓக்கமிலா தாடுகின்ற ஊடகங்கள் அதிர்ந்துறைய,
சாக்கடை அரசியலும் சாய்ந்துவிழ வாக்களிப்பீர்!
சுளுவாக உன்கழுத்திற் றொடையலும் விழுவதில்லை;
தெளிவாகச் சிந்தித்தே திடமாகத் தேர்ந்தெடுத்து,
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கே வாக்களிப்பீர்!
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே,
கடமைகளும் கருத்தேறி, களமீதில் வளர்ச்சிகளும்,
நடக்குமென்ற நன்னெறிக்காய் நல்லவர்க்கே வாக்களிப்பீர்!
களமீதிற் கருத்திலங்கிக் கானல்நீர்க் கனவகற்றுந்
தெளிவான அரசியல்தான் திறன்மிகுந்தத் தாய்நாட்டின்
வளர்ச்சிக்கு வழியென்றே வல்லவர்க்கே வாக்களிப்பீர்!
இராச. தியாகராசன்
====================
பிகு:
புன்னெறி = தீயநெறி, முடங்கர் = மாற்றுத் திறனாளி, நெக்குவிட = விரிசல்விட,
உலுத்தர் = கயவர், முங்குதல்= மூழ்குதல், ஊழ்த்தல் = பிறப்பெடுத்தல்,
துய்த்தல் = சுவைத்தல், ஏக்கழுத்தம் = ஈகோ, ஈடணை = இறுமாப்பு,
முடந்தை = ஊமை, தொடையல் = மலர்மாலை, வல்லாட்சி = சர்வாதிகாரம்.
புதன், 6 மார்ச், 2024
மங்காமல் வாழும் வழி...
(ஒரு பஃது அந்தாதி வெண்பா மாலை)
====================================
திங்கள், 12 பிப்ரவரி, 2024
கவிதையெனக் கோக்கின்றாய்...
வெள்ளி, 9 பிப்ரவரி, 2024
காற்றிலே பறக்கலாம் வாராயோ...
புதன், 24 ஜனவரி, 2024
எம்புதுவை வாருங்கள்...
நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள். 1977இல் இருந்தெனையொரு பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக), குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட, போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!
என்றுமே எம்புதுவை பாவானம் தான். எத்தனை மரபியற் கவிகள்; எத்தனைப் புதுக்கவிகள்; எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்; எத்தனைக் கலைமாமணிகள்; எத்தனைத் தமிழ்மாமணிகள்.
==============================
==============================
செவ்வாய், 23 ஜனவரி, 2024
வேய்குழல் மாயவா...
திங்கள், 22 ஜனவரி, 2024
மகத்தான மானிடரே பாருங்கள்...
திங்கள், 15 ஜனவரி, 2024
விளைகின்ற மாறா வினை....
(கலிவெண்பா)
வாழ்த்து தரும் நாளிதுவே...
வெள்ளிநிற மலைமுகட்டு வியன்தமிழின் நாளிதுவே;
செவ்வாய், 26 டிசம்பர், 2023
ஆழியே கேளாய்...
நாவினிக்கும் பாட்டிசைத்தேன் நான்...
செவ்வாய், 19 டிசம்பர், 2023
தேடுங்கள் மானிடரே தேடுங்கள்..
செவ்வாய், 28 நவம்பர், 2023
வளஞ்சொரியும் பாப்புனைய வாரீர்...
=================================================
தெண்டிரை - தெள்ளிந்த அலை
பொற்றமிழ் - பொன்+தமிழ்
பொற்பு - சிறப்பு
சீந்தி - போற்றி.

















