08.08.2012 அன்று நிகழ்ந்தேறிய, புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவிற்கான பாவரங்கில் பங்கு பற்றி, நான் வாசித்த பாடலிது:
பாவேந்தர் பாட்டைப் படி (நேரிசை வெண்பாக்கள்)
========================================
========================================
திருக்கோயிற் றேரனைய தீந்தமிழா லன்று
விருந்தெனவே பாட்டிசைத்த வேந்தர்! - வரும்நாளில்
தீவாழும் தீமைகளின் தீங்ககல நீயின்று
பாவேந்தர் பாட்டைப் படி.
தூயதமிழ்ச் சொல்லைச் சொடுக்கிச் செழுந்தமிழில்
ஓயாமல் கொக்கரித்த ஓங்கலவர்! - தீயவழி
மேவாம லெந்நாளும் வென்றிடவே இந்நாள்நீ
பாவேந்தர் பாட்டைப் படி.
அய்ய னுரைத்த அழகுதமி ழோங்கிடவே
மெய்யா யுழைத்தபெரும் விந்தையிவர்! - நைவின்றி
மாவான் தமிழ்துலங்க வையகமே இன்றிங்கு
பாவேந்தர் பாட்டைப் படி.
சென்ற வழியெலாம் செந்தமிழே சீலமுற
வென்ற பெரும்புரட்சி வீரரிவர்! - இன்றிங்கே
நாவார என்றும் நறுந்தமிழே தான்முழங்கப்
பாவேந்தர் பாட்டைப் படி.
போர்க்களத்தில் நின்றுதமிழ்ப் புன்மைகளைத் தீய்ப்பதற்கே
கூர்வாளை ஏந்திநின்ற கோட்டையிவர்! - சீர்மலிந்த
நாவேந்தும் நற்றமிழை நாளும்நீ காத்திடத்தான்
பாவேந்தர் பாட்டைப் படி.
வெல்லத் தமிழ்வெல்ல வேட்டைப் புலியெனவே
தொல்தமிழில் பாட்டெடுத்தச் சொல்மறவர்! - பல்கலையாம்
பாவாணர்த் தோன்றல்நீ பைந்தமிழைத் தாங்கிடவே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக