நாட்டுப்புறத் தாலாட்டின்பம்....
ஆரடிச்சா அஞ்சனமே?
======================
ஆரடிச்சா அஞ்சனமே?
அழலாமோ ஆரமுதே?
===================
அலரிப்பூ ராசாத்தி;
அரும்புன ரோசாப்பூ;
அப்பாவும் வருவாரு;
அச்சுப்பூப் பொட்டோட! (ஆரடிச்சா)
சங்குப்பூ ராசாத்தி;
தங்கரளிப் பூவாயி;
தாத்தனும் வருவாரு;
தாமரைப்பூ மொட்டோட! (ஆரடிச்சா)
பவளமல்லி ராசாத்தி;
பளபளங்கும் பவுனாயி;
பாட்டியும் வந்திருவா;
பைநெறைய துட்டோட! (ஆரடிச்சா)
சரக்கொன்ன ராசாத்தி;
சலிக்காத சந்தனமே;
சின்னம்மா வந்திருவா;
செங்கரும்புக் கட்டோட! (ஆரடிச்சா)
பிச்சிப்பூ ராசாத்தி;
பேரழகுச் சீமாட்டி;
பெரியம்மா வந்திருவா;
பெருமேளக் கொட்டோட! (ஆரடிச்சா)
அடுக்குப்பூ ராசாத்தி;
அரமண அஞ்சுகமே;
அத்தையும் வந்திருவா;
அதிரச வட்டோட! (ஆரடிச்சா)
மருக்கொழுந்து ராசாத்தி;
மருதாணிச் செம்பூவே;
மாமியும் வந்திருவா;
மரப்பாச்சிச் செட்டோட! (ஆரடிச்சா)
மஞ்சப்பூ ராசாத்தி;
மருதமல மாமயிலே;
மாமனும் வருவாரு;
மலையாளப் புட்டோட! (ஆரடிச்சா)
செவ்வரத்த ராசாத்தி;
சேலத்து மாம்பழமே;
சின்னக்கா வந்திருவா;
சீனிமுட்டாய் லட்டோட! (ஆரடிச்சா)
மல்லிகப்பூ ராசாத்தி;
மாந்தோப்பு மைனாவே;
மச்சானும் வருவாரு;
வரிசப்பைத் தட்டோட! (ஆரடிச்சா)
செங்கமல ராசாத்தி;
சிரிச்சாடுஞ் சிங்காரி;
சின்னண்ணா வந்திருவான்;
சிங்கப்பூர் பட்டோட! (ஆரடிச்சா)
===========================================
இராச. தியாகராசன்
பிகு:
====
அஞ்சனம் - கண்-மை, அச்சுப்பூ பொட்டு - பொட்டச்சு,
பைநிறைய துட்டு - சுருக்குப்பை துட்டு, வட்டு - தட்டு,
மரப்பாச்சிச் செட்டு - மரப்பதுமை செட்டு,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக