பாவலர், தமிழார்வலர் திரு மகுடேசுவரன் கோவிந்தராஜன் அவர்களின் காலம் பற்றிய முகநூல் நிலைச்சேதியில் பின்னூட்டமாக ஒரு பாடலும், கவிப்பெருஞ்சுடர் திரு ஹரிகிருஷ்ணனின் எந்நிரற் குழுவில் "வாவெழுந்து வாகண் மலர்ந்து" என்கிற ஈற்றடிக்கு ஒரு வெண்பாவும் எழுதினேன். இரண்டுமே அந்த ஶ்ரீதேவி உமையாளை என்னுளமறிய எனக்குத் தோன்றியவை என்பதால், இன்னோரு பத்தி சேர்த்து, கலிவெண்பாட்டாக என்னுடைய வலைப்பூவில் பகிர்கிறேன் இப்போது.
==================================
==================================
சங்கரியே வாராயோ....
==================================
சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமுன்றன்
கோலத்தைக் கண்டிடவே கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானந்தான் வாய்த்திடுமோ? (ஞாலத்தின்)
வித்தகியுன் பின்னலெனும் வல்லூழாம் ஆழியிலே
நித்தமுமே நான்விழுந்து நீந்திடும் வேளையிலே
சித்தமதை மத்தெனவே சீய்த்தே சிலுப்புகின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறெனக்கு வாய்த்திடுமோ? (பித்தமதை)
நாவெழவே நாதியின்றி நாளெல்லாம் போகயிலே
சாவெழுதி வாழ்வெழுதும் சங்கரியிப் பூவுலகில்
பாவெழுதும் பாவலனென் பாமலரை ஏற்றிங்கே
வாவெழுந்து வாகண் மலர்ந்து.
===================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக