பல ஆண்டுகளுக்கு முன்னர், புதுப்பாக்களில் மோகமுற்றிருந்த போதில், நானெழுதிய வரிகள் கீழே!! இற்றைக்கு அதே கருவினை நானெழுதியிருந்தால், என்று நினைத்து 2010 நான் பகிர்ந்த மரபியல் வரிகள் அதற்கும் கீழே!!...
தாடியென்னும் மூடி......
================================
================================
அன்பே நீ,
முத்தமிட்ட இடத்தினிலே
வேறு எவரும் முத்தமிட
வேண்டாமென்றே நினைத்து,
நான் போட்டேன் ஒருமூடி
அதுவே என்றன் தாடி!
முத்தமிட்ட இடத்தினிலே
வேறு எவரும் முத்தமிட
வேண்டாமென்றே நினைத்து,
நான் போட்டேன் ஒருமூடி
அதுவே என்றன் தாடி!
================================
மோகினியே நீயிட்ட முத்தத்தை மறவாநான்
சாகுவரை, முத்தங்கள் தந்தவென் கன்னத்தில்,
மோகத்தில் பிறமங்கை முத்தமீ யாதிருக்க,
வேகின்ற பகலவனின் வேனலென்றும் பாராமல்,
மேகமென்றே போட்டவொரு மெல்லணையோர் மூடியது;
ஆகவென்றே அன்பர்கள் அழைத்திடுமென் தாடியன்றோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக